Education

SEVA for Education

Evening Study Centres

ENGதமிழ்
  • Objective to build/improve educational standard of the target society.
  • Focus on academic performance improvement along with other skill development.
  • Reduce school drop outs.
  • Free study centres after school hours – Eve 5 pm to 7 pm- 6 days a week.
  • Target location- Rural poor and urban slum.
  • Target group – children in the age group of 8 to 16 years.
  • Dedicated teacher per centre.
  • Monthly orientation and yearly training class to teachers for quality education.

கல்விதான மையங்கள்

  • சமுதாய நல சேவை திட்டத்தின் முதல் பணி கல்வி. பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினரின் கல்விதரத்தை உயர்த்த சேவாபாரதி தமிழ்நாடு கல்விதான மையங்களை நடத்தி வருகிறது. குக்கிராமங்கள், குடிசைபகுதிகளில் இப்பணி சிறப்பாக நடைபெறுகிறது. தினசரி இரண்டு மணி நேரம் வீதம் நடைபெறும் இந்த மையங்களை கல்லூரி மாணவ, மாணவிகள், குடும்பத் தலைவிகள் போன்றவர்கள் நடத்தி வருகிறார்கள்.
  • 20 மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆசிரியர் ஆசிரியை வீதம் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன, ஆசிரியர் ஆசிரியைகள் பாடம் கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல் மாணவ, மாணவிகளிடம் நேரம் கொடுத்து அவர்களின் திறமைகள அறிந்து அதை வளர்க்கவும், குறைகளை மாற்றவும் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.
  • சேவாபாரதி கல்வி தான் மையத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி உயர் மதிப்பெண்கள் பெறுவது மட்டுமல்லாம, நடத்தையிலும் சிறந்து விளக்கி பள்ளிக்கும், பெற்றோர்களுக்கு பெருமை சேர்ந்து வருகின்றனர்.
  • கல்வி தான மையங்களை நடத்தும் அசிரியர், ஆசிரியைகளின் திறமைகளை அதிகரிக்க மாவட்ட அளவில் மாதம் தோறும் புத்தாக்க பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
  • ஆசிரியர் ஆசிரியைகள் கற்பிக்கும் திறமை கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாணவ மாணவியும் நற்பண்புகளை உருவாக்கி அவர்களை இந்த நாட்டின் சிறந்த குடிமக்களாக உருவாக்க சிறந்த பயிற்சி அளிக்க அவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.

Moral Classes

ENGதமிழ்
  • Objective is to make the children shape up their future with right behavior and make them a good citizen.
  • Moral class being taught in the same study centre.
  • Class is conducted once in a week for two hours.
  • For two hours every week, the students take a break from their textbooks and have an enjoyable session of songs, prayers and games through which they get introduced to our culture. Thus the students learn not just their school lessons, but also the important aspects of our culture.
  • Good habits relating to personal hygiene, tidiness, etc. are also taught in these classes. The effect of the culture classes has been heart-warming.
  • Children become change agents in their respective society.

பண்பாட்டு வகுப்புகள்

  • மாணவ, மாணவிகள் மத்தியில் கல்வியுடன் பண்பாடு, நல்லொழுக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இருப்பதாக சேவாபாரதி தமிழ்நாடு நம்புகிறது. இதனால் கல்விதான மையங்களுடன் பண்பாட்டு வகுப்புகளையும் நாம் நடத்தி வருகிறோம். மாணவ, மாணவிகளை நற்குணமிக்கவர்களாக உருவாக்குவதே இதன்நோக்கம்.
  • வாரத்தில் ஒரு நாள் இரண்டு மணி நேரம் இந்த பண்பாட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன். நன்னெறி கதைகள், தேசபக்தி, தெய்வ பக்தி பாடல்கள், யோகா, விளையாட்டு போன்ற விஷயங்கள் இதில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. நம்முடைய வீட்டையும், தெருவையும் சுத்தமாக வைத்துக் கொள்வது, நோய் வராமல் தடுக்க சுகாரார முறைகள் போன்ற விஷயங்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
  • நாம் கற்றுக் கொடுக்கும் இந்த நல்ல விஷயங்கள் மூலம் பல பெற்றோர்கள் குடிப்பதை நிறுத்திய சம்பவமும் நடைபெற்று இருக்கின்றது.
  • இந்த வகுப்புகள் சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்த ஏற்படுத்தியுள்ளதோடு பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன.

Free Mobile Library

ENGதமிழ்
  • The current education system does not place much emphasis on our rich Indian culture and history. Most children unfortunately aren’t much aware of our rich heritage and great heroes. To bridge this gap, Sevabharathi Tamilnadu purchases varieties of books on freedom struggle, culture and distributes it to many villages.
  • The local study centre teachers distribute these books for reading among the children and their families. Thus both the children and parents and their friends get an opportunity to learn many things which they hadn’t known earlier.

இலவச நடமாடும் நூலகம்

  • இன்றைய கல்வி முறை மூலம் மாணவ, மாணவிகளுக்கு நம் நாட்டின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை தெரிந்துக் கொள்ள வாய்ப்புகள் குறைவாக உள்ளது. இதை குறையை சரி செய்வதற்காக நடமாடும் நூலகங்களை சேவாபாரதி தமிழ்நாடு நடத்தி வருகிறது.
  • ஆன்மிகம், பண்பாடு, வரலாறு, தேசியம் தொடர்பான சிறிய, சிறிய புத்தகங்கள் சுற்றுக்கு விடப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் உலக பொது அறிவு நன்கு வளர்ச்சி அடைகிறது.

Contribute to Seva

You can Make a Difference Today!

Every Little Drop Helps!